R.T.Sakthidaran

Anything and Everything

R.T.Sakthidaran header image 2

தமிழ் எழுத்துத் திருத்தம் வேண்டுமா?

June 24th, 2010 · 4 Comments

கடந்த மூன்று நாட்களாக கணினியில் என்ன செய்ய ஆரம்பித்தாலும், என்னுடைய முழு நேரமும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய கட்டுரைகளைப் படிப்பதிலேயே சென்றுவிடுகின்றன.

நான் வட நாட்டில் இருக்கும் பொழுதே, இதைப் பற்றி சிந்தித்திருக்கிறேன். காரணம், தமிழில் படித்திருந்ததால், தமிழை புதிதாக கற்றுக்கொள்பவரின் (கஷ்டம், கடினம்: இரண்டுமே வடமொழி தானே) கஷ்டம் புரியவில்லை. சில வருடங்களுக்குப் பிறகு, தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களுடைய குழந்தைகள், தமிழை எழுதக் கற்றுக்கொள்வதற்கு வாய்ப்பில்லாததால், தமிழில் பேசமட்டுமே முடிந்தது. தமிழின் பெருமை அறிந்த என் போன்றோருக்கு இந்த நிலைமை மிகுந்த மன வருத்தத்தை அளித்தது. நான் குடியிருந்த ராஞ்சியில், “மன்றம்” என்னும் ஒரு அமைப்பை ஏற்ப்படித்தியிருந்தோம். அதன் மூலமாக தமிழ் வகுப்பிற்கும் ஏற்பாடு செய்தோம். முன்னேற்றத்தை கண்காணிக்கும் பொழுது, குழந்தைகளின் பல கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல் தவித்தோம். நாம் சிறுவயதில் ஒரே மொழியைக் கற்றோம். ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு, இன்னொரு மொழியை கூடப் படிக்கவில்லை. நம் குழந்தைகள் அப்படி அல்ல, அவர்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளைக் கற்றுக்கொண்டார்கள். அதனால், ஒரு மொழியை இன்னொரு மொழியோடி ஒப்பிட்டு, இது ஏன் இப்படி என்று கேட்க முடிந்தது. அப்படிக் கேட்கும் பொழுதுதான், நாமே முதல் தடவையாக, ஆம் இது ஏன் இப்படி என்று நமக்குள் கேட்டோம். குழந்தைகள் கேட்டது தர்க்க ரீதியாக (அவர்கள் கோணத்தில்) சரியாக இருந்தது, இன்றும் இருக்கிறது. தமிழ் அறிஞர்கள் இக் கேள்விகளுக்குப் பதில் கூறலாம். ஆனால், என் போன்றவர்களால் சொல்லமுடிந்த தெல்லாம், “இது இப்படித்தான்”.

௧௯௭௯ (1979) என்று நினைக்கிறேன். நான் முதன் முதலாக தமிழ் எழுத்து சீர் திருத்தம் பற்றி யோசித்தேன். அதைக் குமுதம் வார இதழுக்கும் அனுப்பினேன். பிரசுரமாகவில்லை. பிறகு அதைப்பற்றி மறந்தே போனேன். ஒன்று மட்டும் இன்றும் நினைவில் இருக்கிறது.
அகர எழுத்துக்கள் அன்று:

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ

நான் மற்ற விரும்பியது:

அ என்னும் எழுத்துடன் மற்ற குறிகளை இணைத்து மற்ற உயிர் எழுத்துக்களை வடிவமைப்பது. அதாவது, ப வை அ என்று நினைத்துக் கொள்வோம்.

ப பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ இது தான் நான் உயிர் எழுத்தில் சொன்ன மாற்றம். இதில் ப வை அ வால் மாற்றிவிடுங்கள்.

இதன் மூலம் ௧௨ (12) எழுத்துக்களை ஒரேழுத்தாக குறைத்து விடலாம். குறிகள் பொது. இதை மட்டும் இராம.கி அவர்கள் படித்தால் என்னை கொன்றே போட்டுவிடுவார்கள்! ஆனால், இன்று நான் இதை ஆதரிக்கவில்லை. அன்று, தமிழை நம் குழந்தைகள் கற்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில், எப்படியும் தமிழை எழிமையானதாக்க வேண்டுமென்று செய்த செயல்.

இன்றைய என் நிலை:

இன்று, உயிரேழுக்கள் ௧௨ (12) அபூர்வ ஒலிகளை குறிப்பதாக உணர்கிறேன். ஆகவே, உயிர் எழுத்தில் மற்றம் கூடாது. இல்லை, குறைத்தே ஆகா வேண்டும் என்றால், “ஐ” யை “அய்” என்றும் “ஔ” யை “அவ்” என்றும் மாற்றலாம் என்று நினைக்கிறேன். இப்படி ஒரு கருத்து நிலவுகிறது என்று நினைக்கிறேன். இந்த மாற்றத்தின் மூலம் உயிர் எழுத்துக்கள் ௧௦ (10) ஆகக் குறையும்.

இன்றைய மெய் எழுக்கள் ௧௮ (18). அவைகள்: (எழுத்தின் மேல் புள்ளி வைக்கப்படவில்லை. நீங்கள் புள்ளி இருப்பதாக கற்பனை செய்து கொள்ள வேண்டுகிறேன்)

க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ள ழ ற ன

மெய் எழுக்கள் உயிர் மெய் எழுத்துக்களாக மாறும் பொழுது ஆகாரம், இகாரம், ஈகாரம், உகாரம், ஊகாரம், எகாரம், ஒகாறம் குறித்த குறிகளைக் கொண்டும் புள்ளியையும் பயன் படுத்தி மாற்றுகிறோம். ஆக, ௮ (8) குறிகளைக்கொண்டு 12 x 18 உயிர் மெய் எழுத்துக்களை வடிவமைக்கலாம். ஆனால், இப்பதினெட்டு எழுத்துக்களில், கீழ்க்கண்ட ஒன்பது மெய் எழுத்துக்களை உயிர் மெய் எழுத்துக்களாக மற்றும் பொழுது தர்க்க ரீதியாக மாறுவதில்லை.

க ச ஞ ட த ந ர ழ ற

இந்த ஒன்பது எழுத்துக்களில், “ட” மட்டுமே அதிக தொல்லை மிக்கதாக காண்கிறேன். “ட” வை “ट” ஆக மாற்றினால் இந்த ஒன்பது மெய் எழுக்களுக்கும் உகாரம் மற்றும் ஊகாரம் தவிர மற்ற மாற்றங்களை ஒரே மாதிரியாக (தர்க்க ரீதியாக) மற்ற முடியும். ஆக, மொத்த சின்னங்கள்:

உயிர் எழுத்து – 10
மெய் எழுத்து – 18
குறிகள் – 8
சிறப்பு எழுத்துக்கள் – 18 (9 x 2)
மொத்தம் -54

ங ஞ ண ந குறைப்பு:

வட மொழியிலும் இதைப்போன்ற எழுத்துக்கள் உள்ளன. ஆனால், இரண்டு மெய் எழுத்துகளுக்கு இடையே வரும் பொழுது அவை ஒரு புள்ளியால் குறிக்கப்படுகிறது. அதன் ஒலி இரண்டாவது மெய் எழுத்தைப் பொறுத்து உச்சரிக்கப் பட வேண்டும். உதாரணமாக, இரண்டாவது மெய் எழுத்து க, ச, ட, த ஆக இருந்தால் முறையே ங, ஞ, ண, ந ஆக உச்சரிக்க வேண்டும் என்பது விதி. புள்ளியை நாம் ஏற்கனவே மெய் எழுத்திற்காக பயன் படுத்தி விட்டதால் வட மொழி முறை சாத்திய மில்லை. இந்த நான்கு எழுத்துக்களை “ன” வை பயன் படுத்தி குறைப்பது தமிழின் சிறப்பே கெட்டு விடும் என்று தோன்றுகிறது. முடிவு: இந்த நான்கு எழுத்துகளும் இருக்கவேண்டும், குறைக்கக் கூடாது.

ந ன குறைப்பு:

“ந” விற்கு பதிலாக “ன” வை பயன் படித்ததினால் என்ன? இதன் மூலம் மூன்று எழுத்துக்களை குறைக்கலாம்.

ல, ள, ழ குறைப்பு:

“ழ” தமிழுக்கு ஒரு சிறப்பு. ரஷ்யன் மொழிக்கும் இந்த சிறப்பு உண்டு. ஆகவே, இதை குறைக்கக் கூடாது.
“ல” மெல்லினம் மிகவும் பரவலாக பயன் படுவதால், இதையும் குறைக்கக் கூடாது.
“ள” வை குறைக்கலாம் என்று தோன்றுகிறது.

ர, ற குறைப்பு:

ர வும் நெடில் குறியும் ஒத்து இருக்கின்றன. இந்த இரண்டு எழுத்துக்களையும் நீக்கி விட்டு ஒரே ஒரு “ര” என்னும் எழுத்தை பயன் படுத்தலாம். ஆக:

உயிர் எழுத்து – அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஒ ஓ = 10
மெய் எழுத்து – க ங ச ஞ ट ண த ப ம ய ര ல வ ழ ன = 15
குறிகள் – புள்ளி, ஆகாரம், இகாரம், ஈகாரம், உகாரம், ஊகாரம், எகாரம், ஒகாறம் = 8
சிறப்பு எழுத்துக்கள் – க ச ஞ த ழ (5 x 2) = 10
மொத்தம் = 43

இராம.கி யின் தத்துவ அடிபடைக்கு ஒத்து, மேற்கண்ட ஐந்து சிறப்பு எழுக்களை மாற்றி அமைத்தால், தமிழில் மொத்த எழுத்துக்களை முப்பத்தி மூன்றாக (33) குறைத்துவிட முடியும். இந்த மாற்றங்கள், தமிழின் தற்போதைய அழகை குறைக்காமல் செய்ய முடியும் என்றால் அதை விட சிறப்பு எதுவும் இல்லை.

தமிழ் எழுத்துத் திருத்தம் வேண்டாம்:

இல்லை, நம் தமிழின் சிறப்பே இதன் வடிவம் தான். இதில் மாற்றம் கூடவே கூடாது. இதற்கு ஆயிரக்கணக்கான காரணங்கள் உள்ளன. தமிழ் இலக்கியத்தில் புலமை இல்லாதவர்கள் அறியார். இப்படியும் ஒரு தர்க்கம்.

ஒரு தகவல் தொழில் நுட்பத்தில் புலமை பெற்றவன் என்ற முறையில், என்னுடைய ஆலோசனை என்னவென்றால், “எழுத்துக்களை குறைப்பது பற்றி கவலை வேண்டாம்; தமிழ் புலவர்கள் ஒன்று சேர்ந்து எழுத்துக்கள் எப்படித்தான் இருக்க வேண்டும் என்று நிர்ணயித்துச் சொல்லுங்கள். தமிழ் மொழி, நாம் நினைத்த கருத்துக்களை இன்னொருவர் நன்றாக புரிந்து கொள்வதற்காக ஒலி வடிவில் உருவாகி பிறகு தான் எழுத்து வடிவத்தில் ஏற்பட்டது. எழுத்துக்கள் எழுதப்படும் சாதனங்களைப் ( பனை ஓலை, அச்சு, தட்டெழுத்து இயந்திரம், கணினி) பொறுத்து, காலவட்டத்தில் மற்றப் பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதில், பெரும்பாலும், தமிழுக்காக சாதனங்களை (தட்டெழுத்துப் பலகை) மாற்றினோமே தவிர தமிழ் எழுத்துக்களை திருத்தவில்லை. இதுவும், தமிழுக்கு ஒரு சிறப்பு. பாதங்களுக்குப் பொருத்தமாக காலணிகளை வெட்டினோம்; காலணிகளுக்கு பொருத்தமாக பாதங்களை வெட்டவில்லை.

இன்று கணினி மாயம் ஆகிவிட்டதால், கணினி இன்றி மொழியை வளர்க்க முடியாது. கணினியில், தமிழில் ஏன் எழுதுகிறோம்? கருத்துக்களை, பரிமாறிக் கொள்ள, சேமிக்க மற்றும் வரும் தகவல்களை அறிந்து கொள்வதர்காகத்தான். இதற்கு, எழுத்துப் பலகை, திரை மற்றும் பதிப்பான்கள் வெறும் சாதனங்கள் தான். இதைத் தவிர, வாய்ப் பேச்சை கணினிக்கு கொடுத்து, கணினியிலிருந்து வாய்ப் பேச்சாக வெளி வருமானால் பல பிரச்சனைகள் குறைந்து விடும். திரையில் வரிவடிவத்தில் விரும்பும் விதத்தில் காண்பிக்க முடியும்.

தமிழ் அறிஞர்கள் முடிவெடுக்க வேண்டும்.

ஆங்கிலத்திற்கு ஒரு ஆப்பு

ஆங்கிலம் அச்சடிக்கும் இயந்திரத்திர்க் தோதாக எழிமையாக இருக்கிறது; அச்சடிக்க. ஆனால், படிப்பதற்கோ மிகவும் கடினம். வட மொழி அல்லது எந்த ஒரு இந்திய மொழிகளில் ஒன்றை மட்டும் கற்றுத் தேர்ந்தவன் ஆங்கிலம் படிக்கும் பொழுது படும் பாட்டைப் பார்க்க வேண்டுமே. ஆங்கிலத்தில் ஏகப்பட்ட முரண்பாடுகள் உள்ளன. உங்கள் எல்லோருக்கும் தெரிந்தது தான். but ஐ பட் என்றும்; put ஐ புட் என்றும்; good ஐ குட் என்றும்; loot ஐ லூட் என்றும்; sun ஐ சன் (சூரியன்) என்றும்; son ஐ சன் (மகன்) என்றும் வாசிக்க வேண்டும்.

மொழியைப் பொறுத்த மட்டில் ஆங்கிலத்திற்கு சிறப்பு மிகக் குறைவு. ஆங்கிலத்திற்கு சிறப்பு அதனுடைய வளமான சொற்கள் (technical vocabulary). இருந்தாலும், நாமும் நம் தாய் மொழியில் சிறப்பாக பணியாற்ற முடியும். கலைச் சொற்க்களை ஏற்படுத்த வேண்டி இருக்கும். முடியாதது அல்ல.

இப்படி எல்லாம் சொல்லிவிட்டதால் ஒரு மொழிக் கொள்கைக்கு ஆதரவு என்று பொருளல்ல. சுமார் 70% மக்கள், தாய் மொழியில் எல்லாம் கற்கலாம், பணியாற்றலாம் (நமது மாகாணத்தில்). ஆனால் மீதம் 30%, ஒரு தேசிய மொழியையும் கற்க வேண்டும். இதற்கு மேலாக, இந்த 30% இல் சுமார் 10% ஆவது ஆங்கிலம், சீனம், ரஷ்யன், ஜேர்மன் போன்ற வெளிநாட்டு மொழிகளை கற்க வேண்டும்.

வாழ்க தமிழ்.

வாழ்க பாரதம்.

Popularity: 10% [?]

  • Share/Bookmark

Tags: Education · Literature · Technology · governance · தமிழ்

4 responses so far ↓

  • 1 narmadha // Jun 25, 2010 at 7:06 PM

    Superb blog..!
    people has to be even more aware of our language..!
    TAMIL VAALGA..!!!
    TAMIL VALARGA..!!!

  • 2 O.S.Subramanian // Jul 1, 2010 at 12:13 AM

    After meeting you today in person in KLNCollege of Engineering, Madurai, I came to know about your blog. I have gone through your view point regarding the Script reformation in Tamil Language. I request you to go through the Sourashtra Script and then compare it with other Indian scripts. You will find that Sourashtra Script is the best among all Indian scripts as far as my knowledge goes.
    If there is any script better than Sourashtra Script, it can be pointed out.
    Please visit my blog
    http://subramanian-obula.blogspot.com

    My nick name is UPAMANYU.

  • 3 Siva // Jul 11, 2010 at 8:38 PM

    Sir, I have forwarded your blog link to Mr.Anto Peter who is the president of Kananithamizh sangam (Association for the Tamil Computing) which organized the Tamil Internet Conference along with the Semmozhi conference. He is a good friend of mine and you can talk to him at 9840099881 on your views. He has the influence to take good things to the right sources.

  • 4 Sakthidaran // Jul 12, 2010 at 1:47 PM

    Thanks, Siva. I will certainly call him. Thanks for the referral. I would certainly be happy, if I could be of some use to the development of Tamil and through that to society.

Leave a Comment